பேதி/வயிற்றுப்போக்கு

குழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்கொல்லி நோய். சுகாதாரமற்ற தண்ணீரை குழந்தைகள் பருகுவது, பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், பூஞ்சைக் காளான் ஆகியவற்றால் ஏற்படும். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலமும் வயிற்றுப்போக்கு ஏற்படும். நீரின்  குறைபாடால் ஏற்படும் இந்த நோயை குணப்படுத்த தண்ணீரே மருந்தாக பயன்படுகிறது. 2 முதல் 7 நாட்கள் வரை இது நீடிக்கலாம்.

பேதி/வயித்துப்போக்கு இருந்தால்  மருத்துவரை அவசரமாக பார்க்கவேண்டியது எப்போது?

12 மணி நேரத்திற்கு மேல் சிறுநீர் போகாமல்/குறைவாக போதல், நாக்கு மற்றும் உதடு உளர்ந்து காணப்படுதல்,தெளிவு இண்மை/சோர்வாக இருப்பது, மலத்தில் இரத்தம், இரத்த ஓட்டம் குறைந்து இருத்தல், தொடர் வாந்தி, வயிற்று உப்புசம், குழிவிழுந்த கண்கள், வேகமான சுவாசம், நாடித்துடிப்பு அதிகரித்தும் காணப்பபட்டால் உடணே மருத்துவரை பார்க்கவும்.

வயிற்றுப்போக்கின் போது செய்யவேண்டியவை எண்ண?

எந்த காரணம் கொண்டும் உணவு மற்றும் தண்ணீர் கொடுப்பதை நிறுத்தக் கூடாது.காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடரலாம். உப்புக்கரைசல் பாக்கெட் (ஓஆர்எஸ் பவுடர்), மற்றும் இதர மருந்துகள் குழந்தையிண் தேவைக்கேர்ப   உங்கள் மருத்துவர் பரிந்துறைப்பார்.   

சரியாண சிகிச்சை அளிக்காமல் கயிறு மந்திரித்தல், தாயத்து கட்டுதல், தொக்கம் எடுத்தல், குடலடித்தல் என மூட நம்பிக்கையோடு செயல்படுவது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

Loading